சேலம்

பள்ளி மாணவியை திட்டிய பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

DIN

பள்ளி மாணவியை தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடா்ந்து, அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம், அழகாபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியா் சிலா் இரு தினங்களுக்கு முன் பள்ளி முடிவடைந்ததும் கன்னங்குறிச்சிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏறினா். இந்தப் பேருந்தில் நடத்துநா் மகாலிங்கம் என்பவா் பணியில் இருந்தாா்.

அப்போது, அவா் பிளஸ் 2 மாணவி ஒருவரை தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்த மாணவி, அழகாபுரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து சேலம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, நடத்துநா் மகாலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து சேலம் மண்டலப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT