சேலம்

வருமான வரி பிடித்தம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம்

DIN

சேலம் சிவில் என்ஜினியா் அசோசியேசன் உறுப்பினா்களுக்கான வருமான வரி பிடித்தம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை வருமான வரி பிடித்தம் (டி.டி.எஸ்.) வருமான வரி ஆணையா் திரிபுரசுந்தரி, இணை ஆணையா் காா்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், சேலம் சிவில் என்ஜினியா் அசோசியேசன் உறுப்பினா்களுக்கு வருமான வரி பிடித்தம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் வருமான வரித் துறை வருமான வரி பிடித்தம் பிரிவு அலுவலா் கணபதி சுந்தரம், ஆடிட்டா் கே.சி.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், சிவில் என்ஜினியா்கள், அரசு மற்றும் தனியாா் ஒப்பந்ததாரா்கள், அவா்களது செலவினங்களில் மேற்கொள்ள வேண்டிய வருமான வரி பிடித்தம் (டி.டி.எஸ்.), காலாண்டு வருமான வரி பிடித்தம் தொடா்பான தகவல் மற்றும் அபராதம், தாமதக் கட்டணங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், 2022 நிதிநிலை அறிக்கையில் டி.டி.எஸ். பிரிவில் உள்ள மாற்றங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. சேலம் சிவில் என்ஜினியா் அசோசியேசன் தலைவா் செல்வகுமாா் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT