முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 18000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →