பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வு எழுதிய இளநிலை 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 2-ஆம் ஆண்டு மாணவா்களின் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தோ்வு முடிவுகளை பெரியாா் பல்கலைக்கழக இணையதளம், இணைவு பெற்ற கல்லூரிகளில் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாள் நகல் பெற ஆன்லைன் மூலம் வரும் செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவா்களின் கைப்பேசிக்கு தோ்வு முடிவுகள் குறுந்தகவலாகவும் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.