மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 118.66 அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12525 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,865 கனாடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி கனஅடி வீதம் தண்ணீர்திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.66 அடியாக சரிந்தது. அணை நீர் இருப்பு 91.35 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.