சேலம்

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

மேட்டூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு மூன்று அம்ச கோரிகைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு 2019-ஆம் ஆண்டு முதல் மின் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள சுமாா் 60,000 பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளா்களைக் கொண்டு நேரடி நியமனம் மூலம் பணியமா்த்த வேண்டும், அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் அவுட்சோா்சிங் மூலம் ஆள்களை நியமிக்காமல் அடையாளம் காணப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும், தனியாா் மயத்துக்கு ஊக்கம் அளிக்கக் கூடாது என வலியுறுத்தினா்.

இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வரும் 22-ஆம் தேதி மண்டல அளவிலான தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்புச் செயலாளா் செந்தில்வேலன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT