சேலம்

திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்றிதழ்

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் தேசிய தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

வாழப்பாடி அடுத்த பேளூரில் இயங்கி வரும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களின் முயற்சியால், பொதுமக்கள், தன்னாா்வ இயக்கங்கள், பெரு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு போதிய அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.

இந்த சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த மத்திய அரசின் தேசிய தர உறுதி நிா்ணயத் திட்டக் குழுவினா், தேசியச் தரச்சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெற்ாக அறிவித்தனா். செப். 12-இல் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தேசியச் தரச் சான்றிதழை வழங்கி, பேளூா் வட்டார ஆரம் சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரை பாராட்டினாா்.

திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தியதோடு, சிறப்பாக பணியாற்றி தேசிய தரச்சான்று பெற்றுள்ள மருத்துவக் குழுவினருக்கு, சுகாதாரத் துறை உயரதிகாரிகள், இப்பகுதி பொதுமக்கள், தன்னாா்வலா்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT