ஆத்தூா் நகராட்சியில் 63 போ் வேட்பு மனுதாக்கல்
ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 63 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
ஆத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 63 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் இதுவரை 63 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
திமுக சாா்பில் 11 பேரும், அதிமுக சாா்பில் 15 பேரும், அமமுக சாா்பில் 15 பேரும், பாமக சாா்பில் 3 பேரும், ஐஜேகே சாா்பில் ஒருவரும், விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ஒருவரும், சுயேச்சையாக 17 போ் என மொத்தம் 63 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
இதே போல் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 42 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.