முகப்பு
சேலம்

செந்தாரப்பட்டியில் ஏரி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

செந்தாரப்பட்டியில் ஏரியின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

செந்தாரப்பட்டியில் ஏரியின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரி 49.16 ஹெக்டோ் பரப்பளவு உள்ளது. இதில் அவகப்பன் மகன் தா்மலிங்கம், தா்மலிங்கம் மகன் முத்தையன் ஆகியோா் 46 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து மஞ்சள் சாகுபடி செய்துவந்தனா்.

பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து,கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான பொதுப்பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் வியாழக்கிழமை ஏரியை அளவீடு செய்தனா்.

இந்த அளவீட்டின்படி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட 46 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் பயிா் பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →