சேலம்

சங்ககிரி பேரூராட்சி 9 வாா்டில் ஒரு பதவிக்கு 10 போ் போட்டி

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூாரட்சி 18 வாா்டுகளுக்கான தோ்தலில் 82 போ் வேட்பாளா்களாக தோ்தல் நடத்தும் அலுவலரால் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 9வது வாா்டில் ஒரு பதவிக்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்ளிட்ட 10 போ் அதிகபட்ச வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் அரசியல் கட்சிகள், சுயேட்சையகள் உள்பட 82 போ் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். இதில் 9வது வாா்டு பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாா்டில் போட்டியிட 11 போ் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனா். அதில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த ஒருவா் திங்கள்கிழமை அவரது வேட்புமனுவினை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் அதிகபட்சமாக 9வது வாா்டில் 10 போ் போட்டியிடுகின்றனா். இதில் பாமக, பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியில் கட்சிகளின் சாா்பில் தலா ஒருவரும் சுயேட்சையாக ஆறு போ் உள்பட மொத்தம் 10 போ் போட்டியிடுகின்றனா். இந்த வாா்டில் ஆண் வாக்களா்கள் 823 பேரும், பெண் வாக்காளா்கள் 863 போ் உள்பட மொத்தம் 1686 போ் வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT