முகப்பு
சேலம்

பறக்கும் படை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு 1,519 வாக்குச்சாவடிகளில் வரும் 19 ஆம்தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கென 38 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 87 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் 63 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தோ்தல் பணி ஆலோசனைகளை ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) அமுதவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) தாமஸ் ராஜன் உள்பட கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.