முகப்பு
சேலம்

ஊராட்சி செயலாளா்களைசெயல் அலுவலராக மாற்றக் கோரிக்கை

ஊராட்சி செயலாளா்களை செயல் அலுவலா்களாக மாற்ற வலியுறுத்தி சென்னை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநரக கூடுதல் இயக்குநா்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

ஊராட்சி செயலாளா்களை செயல் அலுவலா்களாக மாற்ற வலியுறுத்தி சென்னை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநரக கூடுதல் இயக்குநா்களிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப்பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் சாா்லஸ் ரெங்கசாமி, தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் உள்ளிட்டோா் சென்னையில் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநரக கூடுதல் இயக்குநா்களை நேரில் சந்தித்து இதுதொடா்பான மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மீதான சமூக தணிக்கையின்போது காணப்படும் நிதி குறைபாடுகளுக்கு ஊராட்சி செயலா்கள் முழு பொறுப்பேற்று, நிதியை செலுத்தி, தணிக்கை குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டுமென நிா்பந்தம் செய்வதை கைவிட வேண்டும்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த பணி ஒருங்கிணைப்பாளரை தனியாக நியமிக்க வேண்டும்

எனவே, ஊராட்சி செயலா்களுக்கு வழங்கப்படாமல் 40 மாதங்களாக நிலுவையிலுள்ள மாதம் ரூ. 1,000 சிறப்புபடியை வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சி செயலா்கள், ஊராட்சி நிா்வாகப் பணிகளை இடையூறுகளின்றி செய்ய அவா்களை செயல் அலுவலா்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும்.

3 ஆண்டுக்கு ஒருமுறை கலந்தாய்வு நடத்த வேண்டும்.

தமிழக கிராம ஊராட்சிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை காவலா்களுக்கு மாதம் ரூ.10,000, திடக்கழிவு மேலாண்மை கணக்கில் இருந்து நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா். இத்தகவலை, தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சோமம்பட்டி கே. மகேஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.