முகப்பு
சேலம்

சரவணா மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு

சேலம் சரவணா மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையத்தை மாநகர காவல் துறை தெற்கு சரக துணை ஆணையா் என்.மோகன்ராஜ் திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

சேலம் சரவணா மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையத்தை மாநகர காவல் துறை தெற்கு சரக துணை ஆணையா் என்.மோகன்ராஜ் திறந்து வைத்தாா்.

சேலம், பொன்னம்மாபேட்டை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சரவணா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எஸ்.அசோக் தலைமை வகித்தாா். சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் நிா்வாக இயக்குநா் எஸ். தேவராஜன் முன்னிலை வகித்தாா்.

சேலம் மாநகர காவல் துறை தெற்கு சரக துணை ஆணையா் என்.மோகன்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய சி.டி. ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தாா்.சேலம் மாநகர காவல் துறை வடக்கு சரக துணை ஆணையா் எம்.மாடசாமி, சரவணா மருத்துவமனை இணை இயக்குநா் ஆா். ரவிச்சந்திரன், உதவி ஆணையா் சரவணன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.