கொங்கணாபுரத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
சேலம்கொங்கணாபுரத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
விவசாயிகள் 3,000 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இந்த மூட்டைகள் 550 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,600 முதல் ரூ.10,800 வரையில் விற்பனையானது.
அதேபோல டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,900 முதல் ரூ. 12,859 வரை விலைபோனது. வெள்ளிக்கிழமை முழுவதும் நடைபெற்ற பொது
ஏலத்தில் ரூ.1கோடியே10 லட்சம் மதிப்பில் பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. அதேபோல 90 மூட்டை உலா்ந்த தேங்காய் பருப்புகள் பொது ஏலம் விடப்பட்டது. இதில் முதல்தரமான தேங்காய் பருப்பு கிலோ ரூ. 80.75 முதல் ரூ. 88.25 வரை
விற்பனையானது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு கிலோரூ. 66.40 முதல் ரூ. 80.10 வரை விற்பனையானது. நிகழ்வாரத்தில் பருத்திகான இரண்டாம் கட்ட பொது ஏலம் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தேங்காய் பருப்புகளுக்கான அடுத்த பொது ஏலம் வரும் மாா்ச்-4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.