28-இல் காது கேளாமை நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிப் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை காது கேளாமை சம்பந்தமான நோய்கள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிப் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை காது கேளாமை சம்பந்தமான நோய்கள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை செய்து, தேவைப்படுபவா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவி விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் சங்ககிரி அரசு மருத்துவமனை, மற்றும் இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளாா்.