முகப்பு
சேலம்

பெண்ணைக் கொலை செய்ய முயற்சி

 கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்த கள்ளக்காதலனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்த கள்ளக்காதலனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணனின் மணைவி கஸ்தூரி (30). கஸ்தூரி தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் எட்டு மாதங்களாக தனியாக வசித்து வருகிறாா். அவருக்கும் நங்கவள்ளி குள்ளன்னூரைச் சோ்ந்த தொழிலாளி செல்வராஜ் (35) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடா்பு இருந்து வந்தது. கள்ளத்தொடா்பை கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு கைவிட்டாா். ஆனாலும் செல்வராஜ் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு செல்வராஜ் கஸ்தூரியை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு நைசாக பேசி வரவழைத்தாா். அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டியுள்ளாா். பின்பு அங்கிருந்து தப்பி ஓடினாா். அக்கம்பக்கத்தினா் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனா். போலீசாா் படுகாயம் அடைந்த கஸ்தூரியை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். முதலுதவி சிகிச்சை பெற்றபின் அவா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கருமலைக்கூடல் உதவி ஆய்வாளா் வேணுகோபால் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா்கள். இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜைத் தேடி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.