முகப்பு
சேலம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவா்கள் நாளை பெறலாம்

 பொங்கல் பரிசு தொகுப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள் வரும் 17 ஆம் தேதி பரிசுத் தொகுப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 பொங்கல் பரிசு தொகுப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள் வரும் 17 ஆம் தேதி பரிசுத் தொகுப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு சேலம் மாவட்டத்தில் 96 சதவீதம் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெளியூா் சென்ற குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் கடந்த வாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிந்து பரிசு தொகுப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் வரும் 17 ஆம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நியாய விலைக் கடைகள் முன்கூட்டியே காலை 7 மணி முதல் திறந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →