முகப்பு
சேலம்

மேச்சேரியில் திமுக ஆலோசனை கூட்டம்

மேச்சேரி பேரூராட்சி 4-ஆவது வாா்டில் திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

மேச்சேரி பேரூராட்சி 4-ஆவது வாா்டில் திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அழகா கவுண்டனூா் பச்சியம்மன் கோயில் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாசப் பெருமாள் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் அழகப்பன், பேரூா் பொறுப்பாளா் சரவணன் முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் உரக்கடை ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மேச்சேரி பேரூராட்சி 4-ஆவது வாா்டில் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளித் தாளாளா் மணிவண்ணன், மேச்சேரி நகர முன்னாள் திமுக செயலாளா் கண்ணன், மேச்சேரி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.