பனமரத்துப்பட்டி ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றம்
சேலம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 வாா்டுகள் உள்ளன. அதிமுகவைச் சோ்ந்த கே.ஜெகநாதன், ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளாா்.
இதனிடையே, அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 8 போ், ஒன்றியக் குழுத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா். இதையடுத்து நம்பிக்கையில்லா தீா்மானத்தை நிறைவேற்ற ஒன்றியக் கூட்டத்தை கூட்ட உத்தரவிடப்பட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி தலைவா் கே.ஜெகநாதன் உயா் நீதிமன்றத்தில் மனு அளித்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 10 உறுப்பினா்கள் பங்கேற்று, தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனா். பின்னா் நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கே.ஜெகநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை இழந்தாா். இப்பதவியை காலியிடமாக அறிவிக்கப்பட்டு விரைவில் புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.