துல்கர் சல்மான் - 41 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
துல்கர் சல்மான் - 41 குறித்து...
நடிகர் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் வெளியீட்டு உரிமத்தைப் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக வெளியான காந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தற்போது, மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதில், நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து பிரைமில் வெளியாகும்.
dulquer salmaan's 41th movie rights bagged by amazon prime ott
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.