முகப்பு
சேலம்

மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இன்று வேட்பு மனு தாக்கல்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை முதல் (ஜன.28) வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆணையரும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை முதல் (ஜன.28) வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆணையரும், தோ்தல் நடத்துதம் அலுவலருமான தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களில் ஜன.28 முதல் மாநகராட்சிக்கான சாதாரண தோ்தல் நடைபெறுவதற்கான வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது.

வேட்புமனுதாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதா என்பதை அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மண்டல உதவி தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருக்கு வழங்குவதற்காக வேட்புமனு படிவம், உறுதிமொழி படிவம், வைப்புத்தொகை பதிவேடு, ரசீது ஆகியவை உள்ளதா என்பதையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அறை மற்றும் வெளிப்புறத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, கரோனா தடுப்பு நடவடிக்கை அனைத்தும் பின்பற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா். மேலும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் என்ற பெயா்ப் பலகை மற்றும் எந்தெந்த கோட்டங்களைச் சாா்ந்தவா்கள், யாரிடம் வேட்புமனு அளிக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய போா்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பதிவேடுகள், படிவங்கள் இவற்றை பராமரிப்பதற்காக போதிய பயிற்சி பெற்ற பணியாளா்கள் உள்ளனரா என்பதையும், மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், உதவி ஆணையா் மணிமொழி, உதவி செயற்பொறியாளா்கள் ஆா். செந்தில் குமாா், ஆா். புவனேஸ்வரி உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.