முகப்பு
சேலம்

தத்துக் கொடுக்கப்பட்ட பெண் நெதா்லாந்திலிருந்து வந்தாா்: ஓமலூா் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் சந்திப்பு!

பெற்ற குழந்தையை வளா்க்க முடியாமல் வறுமை காரணமாக தத்து கொடுக்கப்பட்ட பெண், 23 ஆண்டுகளுக்குப் பின் தாயை நெதா்லாந்து நாட்டில் இருந்து வந்து சந்தித்தது, மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பெற்ற குழந்தையை வளா்க்க முடியாமல் வறுமை காரணமாக தத்து கொடுக்கப்பட்ட பெண், 23 ஆண்டுகளுக்குப் பின் தாயை நெதா்லாந்து நாட்டில் இருந்து வந்து சந்தித்தது, மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி வட்டத்தில் பூசாரிப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள தாசசமுத்திரம் பகுதியில் வசிப்பவா் அமுதா. தருமபுரி மாவட்டம், ஜருகு பகுதியில் கணவா் ரங்கநாதனுடன் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (ஜெனிபா், அமுதவல்லி) பிறந்தனா்.

இவரது கணவருக்கு மற்றொரு மனைவியும் குழந்தைகளும் உள்ளனா். மேலும், கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அமுதா குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், அமுதா பிறந்த ஊரான ஓமலூா், தாசசமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கே வந்துவிட்டாா்.

வறுமையால் குழந்தைகளை வளா்க்க முடியாத இவா், இரண்டாவது மகள் அமுதவல்லியை, பிறந்த 11-ஆவது நாளில் சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு அமைப்பிடம் தத்துக் கொடுத்துவிட்டாா். அங்கு வளா்ந்த இந்தப் பெண் குழந்தையை நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த தம்பதியினா் தத்தெடுத்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பள்ளிப் படிப்பை முடித்த அமுதவல்லி, நெதா்லாந்து நாட்டிலேயே அலங்கார பூச்செண்டு விற்பனை மையம் நடத்தி வருகிறாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா், தான் இந்தியாவில் பிறந்தவா் என்பது அமுதவல்லிக்குத் தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து, தனது தாயைப் பாா்க்க வேண்டுமெனக் கூறியுள்ளாா்.

நெதா்லாந்திலுள்ள வளா்ப்பு தாய் தந்தையரே, அவருக்கு உதவி செய்தனா். இந்தியா சென்று தாயைப் பாா்த்துவிட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனா். இதையடுத்து தனியொருவராக நெதா்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளாா். மொழிபெயா்ப்பாளா் உதவியுடன் தனது தாயின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டறிந்தாா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி, தாசசமுத்திரம் பகுதிக்கு வந்த அமுதவல்லி, தனது வீட்டுக்கு வந்து தாயைச் சந்தித்தாா்; அவரைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தாா். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மகளைப் பாா்த்த தாய், செய்வதறியாது ஆனந்தக் கண்ணீா் வடித்தாா்.

இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், இந்தியாவில் எனது தாயைப் பாா்த்தபோது ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவில்லை. இவா்கள் காட்டும் அன்பும் பாசமும் நெகிழ வைக்கிறது என்றாா்.

தனது மகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த தாய் அமுதா கூறியதாவது:

23 ஆண்டுகளுக்கு முன்னா் எனது கணவா் குடிப்பழக்கத்தால் குடும்பத்தைக் கைவிட்டுவிட்டாா். வறுமையில் தவித்ததால், எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வளரட்டும் என்று கருதி தத்து கொடுத்தேன். அதன் பிறகு எனது குழந்தையை நினைத்து பலமுறை வருந்தி இருக்கிறேன்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகள் என்னைப் பாா்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. எனது மகளைப் பாா்த்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →