சேலம்

சேலம் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணி நீக்கம்

DIN

சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலர் ஆர்.கெளதமை, தற்காலிக பணியிடை நீக்கம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட வன அலுவலராக கௌதம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  அலுவலகத்திற்கு வராமல் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அலுவலகத்திற்கு வந்ததாகவும் இதனால் அவர் கையெழுத்திட வேண்டிய ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கௌதமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த ஜூலை 4 ஆம் தேதி உத்தரவிட்டது.

சேலம் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் நேரடியாக இந்திய வனப்பணி  (ஐ.எஃப்.எஸ்.) தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT