காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து காவேரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டம் பவானியில் காவேரி அமுதநதி பவானி ஆறு ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் ஆடி மாதம் 1ஆம் தேதி புனித நீராட வருடம் தோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள தடுப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளான ஐயப்பா சேவை மண்டபம், காவேரி வீதி, கந்தன் பட்டறை சாலை, பூக்கடை வீதி, தேவபுரம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட தடுக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவில் படித்துறையில் புனித நீராட தடை விதித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.