முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,23,000 கன அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,23,000 கன அடியாக சரிந்தது. 

கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தனிந்ததால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,23,000 கனஅடியாக சரிந்தது.  

அணையிலிருந்து வினாடிக்கு 1,33,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,10,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் மட்டம் 120.27 அடியாகவும், நீர் இருப்பு 93.90 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

முழு கட்டுரையைப் படிக்க →