தம்மம்பட்டி அருகே எலி பேஸ்ட்டை சாப்பிட்ட குழந்தை பலியானது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே மண்மலைபாலக்காடு முயல்கரட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34), இவர் தம்மம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார். இவரது 3 வயது குழந்தை வேம்பரசி, கடந்த 19 ஆம் தேதி, வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை, டூத் பேஸ்ட் என நினைத்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளது.
இதையும் படிக்க- மருத்துவமனையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் டிஸ்சார்ஜ்
உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை பலியானது. இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.