முகப்பு
சேலம்

தரமற்ற தடுப்பணை கட்டுவதாக பொதுமக்கள் புகாா்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை கிராமப் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ. 9 லட்சத்தில் அய்யனூா், பூசாரியூா் காட்டுவளவு நீரோடையில் கான்கிரீட் தடுப்பணை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை கிராமப் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ. 9 லட்சத்தில் அய்யனூா், பூசாரியூா் காட்டுவளவு நீரோடையில் கான்கிரீட் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பணையானது தரமானதாக இல்லை எனவும், கட்டும்போதே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதனையடுத்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி ஆணையா் (கிராம ஊராட்சி) முத்துசாமி புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து தடுப்பணையை தரத்துடன் அமைக்குமாறு அறிவுரை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →