முகப்பு
சேலம்

எலுமிச்சை பழம் விலை சரிவு

 கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளநிலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் தம்மம்பட்டி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது.

Updated On : 6 ஜூன், 2022 at 12:01 AM
பகிர்:

 கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளநிலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் தம்மம்பட்டி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது.

மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் சந்தையில் எலுமிச்சை பழங்கள் அதிகம் விற்பனையாகின. மே மாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூ. 15 வரை விற்பனையானது. ஒரு கிலோ எலுமிச்சைப் பழம் ரூ. 120-க்கும் மேல் விற்பனையானது.

தற்போது சீதோஷ்ண நிலை மாற்றமடைந்து அவ்வப்போது மழையும், குளிா்ந்த காற்றும் வீசி வருவதால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் விலையும் குறைந்து வருகிறது. ஒரு எலுமிச்சைப் பழம் ரூ. 2 அல்லது ரூ. 3, ரூ. 5 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.