கோப்புப்படம் 
சேலம்

'ஜில்' கிளைமேட் எதிரொலி: தம்மம்பட்டியில் எலுமிச்சை பழம் விலை சரிவு

கோடை காலத்தின் உச்சமான மே மாதம் முடிந்ததாலும், தற்போது, மழையின் காரணமாக நிலவிவரும் கிளைமேட் காரணமாகவும், தம்மம்பட்டியில் எலுமிச்சை பழத்தின் விலை சரிந்தது.

DIN

கோடை காலத்தின் உச்சமான மே மாதம் முடிந்ததாலும், தற்போது, மழையின் காரணமாக நிலவிவரும் கிளைமேட் காரணமாகவும், தம்மம்பட்டியில் எலுமிச்சை பழத்தின் விலை சரிந்தது.

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. மே மாதத்தில், கோடை வெயிலின் உச்சமான அக்னிநட்சத்திரம் தொடங்கி, முடிந்துள்ளது.

வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க, மக்கள் விரும்பி அருந்தும் சர்பத், கரும்பு ஜூஸ் ஆகியவற்றிக்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்தது. இதனால், தம்மம்பட்டியில் உள்ள கடைகளில், ஒரு எலுமிச்சை பழத்தின் விலை அதன் அளவைப் பொறுத்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்றது. தற்போது, கோடை முடிந்த நிலையில், இப்பகுதியில் அவ்வபோது மழை பெய்துவருவதால் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது.

சர்பத், கரும்பு ஜூஸ் விற்பனையும் மந்தமாகிவிட்டது. இதனால், எலுமிச்சையின் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, தம்மம்பட்டியில் ஒரு எலுமிச்சைப் பழம் அளவிற்கேற்ப ரூ.2, 3, 5 என விலை சரிந்து விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT