சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் சந்திப்பு. 
சேலம்

சங்ககிரி: 27 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

DIN

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993-1995ம் ஆண்டு மேல்நிலை கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. அவர்கள் பயின்ற போது பணியாற்றிய முன்னாள் பள்ளித்தலைமையாசிரியர் கே.தினகரன், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், தமிழாசிரியர் தங்கவேல், தற்போது பணியில் உள்ள ஆசிரியர் செந்தில்குமார், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப்பேசினர். 

முன்னாள் மாணவர்கள் சரவணன், சதீஸ், கோவிந்தனர், மாதேஸ்வரன் உள்ளிட்ட 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவரவர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பறைகளுக்கு முன்னர் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பிரிவிலும் பயின்றவர்கள் முன்னாள் தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி உதவியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினர். 

முன்னாள் மாணவர், மாணவிகளின் சார்பில் பள்ளிக்கு தேவையான கணினிகளை வழங்குவது என முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT