முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6417 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6417 கன அடியாக அதிகரித்துள்ளது. 

நேற்று காலை 114.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 114.63 அடியாக சரிந்ததுள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை  காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2077 அடியிலிருந்து வினாடிக்கு 6417கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.16 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.