ஈக்கள் சூழ் கிராமம்: திருமண மண்டபத்தைவிட்டு அவசரமாகப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி! 
சேலம்

ஈக்கள் சூழ் கிராமம்: திருமண மண்டபத்தைவிட்டு அவசரமாகப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈக்கள் தொல்லையால் அவசரமாக மண்டபத்திலிருந்து வெளியேறினார்.

DIN

சேலம்:  சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈக்கள் தொல்லையால் அவசரைமாக மண்டபத்திலிருந்த வெளியேறினார்.

சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு  திருமணவிழாவின் போது, மண்டபத்துக்குள் ஈக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்ததால் உறவினர்கள் கடும் அவதியடைந்தனர். 

 

சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் பங்க் வெங்கடாசலம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சேலம் - நாமக்கல் சாலையில், ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது 

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள், மண்டபத்திலிருந்த ஈக்களின் தொல்லையால் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக உணவு அருந்தும் இடங்களில் கூட்டம் கூட்டமாக ஈக்கள் அலைமோதியது. மண்டபத்தில் அமரவும் முடியாமல் உறவினர்கள் திணறினர் .
 

இந்த திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்துவதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 
வந்திருந்தார். ஆனால் அவரையும் ஈக்கள் கூட்டம் விட்டு வைக்கவில்லை. இதனாலேயே, மணமக்களை வாழ்த்தி விட்டு, அவர் மண்டபத்தை விட்டு விரைவாக வெளியேறினார்

இவரைப்போலவே முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஈக்கள் தொல்லையால்  விரைவாக மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் இப்படி ஈக்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததும், இதனால், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அவதிக்குள்ளானதும், திருமண வீட்டாருக்கும் கவலையை ஏற்படுத்தியது.  அந்தத் திருமண மண்டபத்தை சுற்றி அதிக அளவில் கோழிப் பண்ணைகள் இருப்பதால் இது போன்று ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT