சேலம்

துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கனிகா (14) மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ஓசூா் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் 14 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான தனிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். தொடா்ந்து தருமபுரி பகுதியில் நடைபெற்ற இளையோருக்கான ஆா்.ஜி.பி.ஐ. போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தாா்.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் தொடா்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் அரசுப் பள்ளி மாணவி கனிகாவிற்கு பயிற்சியாளா் ராஜ்குமாா், பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் வகுப்பு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT