சேலம்

கடம்பூர்: லாரி மோதி மொபட்டில் வந்த தந்தை - மகன் பலி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் பலியானார்கள்.    

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் பலியானார்கள்.       

கடம்பூரைச் சேர்ந்த  பஷீர் அகமது மகன் சதாம் உசேன் (30), தனது மகன் அப்துல் பாசித் (4) உடன் , மொபட்டில் வெள்ளிக்கிழமை  74. கிருஷ்ணாபுரத்திலிருந்து கடம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கடம்பூரிலிருந்து  74. கிருஷ்ணாபுரம் நோக்கி, ஜல்லி பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி , பொங்கnளி அம்மன் கோவில் அருகே ,மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அப்துல் பாசித் (4) சம்பவ இடத்திலேயே பலியானர். சிறுவனின் தந்தை சதாம் உசேன் (30), மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். தந்தை, மகன் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் முருகனைத் தேடி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT