சேலம்

பெண் கல்வியே நாட்டின் வளர்ச்சி: பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

DIN

வாழப்பாடி அருகே நடைபெற்ற தனியார் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். ஜெகநாதன், பெண் கல்வியே நாட்டின் வளர்ச்சி என தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வைகை கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கல்லூரி தலைவர் அய்யாவு தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் பிரகாஷ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பொருளர் முனைவர் வீரமணி, செயலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், 'கிராமப்புற மாணவிகள் படிக்கும் இக்கல்லூரியில் நடைபெறும் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கல்லூரி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண் கல்வி என்பது தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு வீட்டிற்கோ, ஒரு குடும்பத்திற்கோ மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானதாகும்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை தந்தை பெரியார் சமூகத்திற்கு உணர்த்தி இருக்கிறார். பட்டம் பெறுகின்ற பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும், உயர் கல்வி பயில வேண்டும்' என்றார். இவ்விழாவில், இக்கல்லூரியில் பயின்ற, 275 மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT