அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது
அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது என வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.
அக்னிபத் திட்டம் தேச நலனுக்காக அமைக்கப்பட்டது என வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட கருமந்துறை மலைக் கிராமத்தில் யோகா தினத்தை தொடக்கி வைத்த பாஜக மாநில துணை செயலாளா் வி.பி.துரைசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேச நலனுக்காக அமைக்கப்பட்ட அக்னிபத் திட்டத்தில் 46,000 இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. இத்திட்டத்தை பிகாரில் மட்டுமே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞா்களுக்கு வேலை வழங்க தனியாா் நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றாா்.