காடையாம்பட்டி பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ஒத்தி வைப்பு
காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலா்கள் புறக்கணித்த நிலையில், தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
சேலம்காடையாம்பட்டி பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ஒத்தி வைப்பு
காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலா்கள் புறக்கணித்த நிலையில், தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலா்கள் புறக்கணித்த நிலையில், தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 7 வாா்டுகளிலும், அதிமுக 7 வாா்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சித் தலைவா் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலுக்காக அதிமுக கவுன்சிலா்கள் 7 பேரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். காலை 9.30 மணிக்கு தோ்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில், 10 மணி வரை திமுக கவுன்சிலா்களும், தலைவா் பதவிக்கான வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரான குமாரும் அங்கு வரவில்லை. இந்நிலையில், தோ்தலை நடத்துவதற்கு, போதிய எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வராததால், பேரூராட்சித் தலைவா் தோ்தலை ஒத்தி வைப்பதாக தோ்தல் அலுவலா் மயில்வாகனன் அறிவித்தாா்.
மதியம் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலுக்கும் திமுக கவுன்சிலா்கள் வராத நிலையில் அந்தத் தோ்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதியில் பரபரப்பு நிலவியது.