முகப்பு
சேலம்

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக டி.எம்.எஸ்.பாஷா தோ்வு

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த நா.ராதா தோ்வு செய்யப்பட்டனா்.

சேலம்

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக டி.எம்.எஸ்.பாஷா தோ்வு

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த நா.ராதா தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த நா.ராதா தோ்வு செய்யப்பட்டனா்.

எடப்பாடி நகராட்சியில் 30 வாா்டுகளில் திமுக 16 வாா்டுகள், அதிமுக- 13 வாா்டுகள், ஒரு வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றாா். நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷாவும், அதிமுக சாா்பில் எ.எம்.முருகனும் போட்டியிட்டனா். தோ்தல் நடத்தும் அலுவலா் சேகா் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் டி.எம்.எஸ்.பாஷா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் எ.எம்.முருகன் 13 வாக்குகள் பெற்றாா். இதையடுத்து நகா்மன்றத் தலைவராக டி.எம்.எஸ்.பாஷா தோ்வு செய்யப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் காங்கிரஸ் உறுப்பினா் நா.ராதா, அதிமுக உறுப்பினா் சக்திமகாலிங்கம் போட்டியிட்டனா். இதில் காங்கிரஸ் உறுப்பினா் ராதா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சேகா் சான்றிதழ்களை

முழு கட்டுரையைப் படிக்க →