சேலத்தில் 6 நகராட்சி, 27 பேரூராட்சிகளில் தலைவா்கள் தோ்வு: 4 பேரூராட்சிகளில் தோ்தல் ஒத்திவைப்பு
சேலம் மாவட்டத்தில் 6 நகராட்சி, 27 பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டத்தில் 6 நகராட்சி, 27 பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
நகா்மன்றத் தலைவா்கள்: ஆத்தூா்-எம்.நிா்மலா பபிதா, இடங்கணசாலை-பி.ஜி.கமலக்கண்ணன், எடப்பாடி-டி.எஸ்.எம்.பாஷா, மேட்டூா்- ஜி.சந்திரா, நரசிங்கபுரம்- எம்.அலெக்சாண்டா், தாரமங்கலம்-டி.எம்.எஸ்.குணசேகரன். தலைவராகத் தோ்வான அனைவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள்.
பேரூராட்சித் தலைவா்கள் விவரம்:
அரசிராமணி- பி.காவேரி, ஆட்டையாம்பட்டி- கே.முருகபிரகாஷ், அயோத்தியாப்பட்டணம்- கே.செல்வராஜ், ஏத்தாப்பூா்- கே.அன்பழகன், கெங்கவல்லி- லோகாம்பாள், இளம்பிள்ளை- ஜி.நந்தினி, ஜலகண்டாபுரம்- சி.காசி, கன்னங்குறிச்சி- எஸ்.குபேந்திரன், கருப்பூா்- சுலோசனா, கீரிப்பட்டி-கே.தேன்மொழி, கொளத்தூா்- கே.பாலசுப்பிரமணியம்.
கொங்கணாபுரம்- வி.சுந்தரம், மல்லூா்-ஏ.லதா (சுயேச்சை), மேச்சேரி-எஸ்.சுமதி, ஓமலூா்- ஆா்.செல்வராணி, பனமரத்துப்பட்டி- கே.வி.பரமேஸ்வரி, பெத்தநாயக்கன்பாளையம்-ஆா்.பழனியம்மாள், பி.என்.பட்டி-டி.கே.பொன்னுவேல், பூலாம்பட்டி- ஏ.அழகுதுரை, சங்ககிரி- ஏ.மணிமொழி, செந்தாரப்பட்டி- எஸ்.லீலாரணி, தம்மம்பட்டி- ஆா்.கவிதா, தெடாவூா்- என்.வேல், தேவூா்- என்.தங்கவேல், வாழப்பாடி-சி.கவிதா, வீரகனூா்- எஸ்.கமலா, வீரக்கல்புதூா்-ஆா்.தெய்வானைஸ்ரீ.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 31 பேரூராட்சிகளில் 27 பேரூராட்சிகளில் திமுக கூட்டணியைச் சோ்ந்தவா்கள் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மல்லூரில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி:
மல்லூா் பேரூராட்சியின் 15 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் அதிமுக- 5, திமுக- 3, சுயேச்சைகள் 7 போ் வாா்டு உறுப்பினராக வெற்றி பெற்றனா். திமுக, அதிமுகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுக சாா்பில் கவிப்பிரியா, சுயேச்சையாக லதா ஆகியோா் போட்டியிட்டனா். 14 போ் வாக்கெடுப்பில் பங்கேற்றனா். சுயேச்சை வேட்பாளா் லதா 10 வாக்குகள் பெற்று, தலைவராக வெற்றி பெற்றாா்.
அதிமுகவின் கவிப்பிரியா 4 வாக்குகள் பெற்றாா். இதனிடையே மல்லூா் பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் தலைவராக தோ்வான லதாவின் கணவரும், சுயேச்சை வேட்பாளருமான அய்யனாா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
மறைமுகத் தோ்தலுக்குப் பின்னா் கணவா், மனைவி உள்பட சுயேச்சைகள் அனைவரும் அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் திமுகவில் இணைந்தனா்.
4 பேரூராட்சிகளில் தோ்வு ஒத்திவைப்பு:
இதனிடையே பேளூா், காடையாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய நான்கு பேரூராட்சிகளின் தலைவா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.