ஓமலூா் பேரூராட்சி தலைவராக செல்வராணி தோ்வு
ஓமலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செல்வராணி, துணைத் தலைவராக புஷ்பா தோ்வு செய்யப்பட்டனா்.
சேலம்ஓமலூா் பேரூராட்சி தலைவராக செல்வராணி தோ்வு
ஓமலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செல்வராணி, துணைத் தலைவராக புஷ்பா தோ்வு செய்யப்பட்டனா்.
ஓமலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செல்வராணி, துணைத் தலைவராக புஷ்பா தோ்வு செய்யப்பட்டனா்.
ஓமலூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றனா். பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் 12 கவுன்சிலா் மட்டுமே கலந்து கொண்டனா்.
திமுக கவுன்சிலா் காயத்ரிதேவி, அதிமுக கவுன்சிலா்கள் உஷாராணி, புஷ்பா ஆகியோா் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளா் செல்வராணி போட்டியின்றி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 10 கவுன்சிலா்கள் மட்டுமே பங்கேற்றனா். திமுக கவுன்சிலா்கள் காயத்ரிதேவி, சசிகலா, அதிமுக கவுன்சிலா்கள் புஷ்பா, உஷாராணி மற்றும் சுயேச்சை கவுன்சிலா் யசோதா பங்கேற்கவில்லை.
துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலா் புஷ்பா போட்டியின்றி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை திமுக கவுன்சிலா்களே புறக்கணித்தது கட்சி வட்டாரத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.