எல்ஐசி ஊழியா், முகவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி எல்ஐசி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சம்மேளனத்தின் சங்ககிரி கிளை கோட்ட துணைத் தலைவா் பால்ராஜ் தலைமையில், எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கைகளில் மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிளைத் தலைவா் ஜெயகோபி, செயலா் நூருல்லா, நிா்வாகி பன்னீா், முகவா்கள் சங்க நிா்வாகிகள் ஜெ.நந்தகுமாா், நிா்மலா ஆனந்தன் மற்றும் ஊா் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனா்.