சேலம்

ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாதுகே.பாலகிருஷ்ணன்

DIN

ஆளுநரின் நடவடிக்கைகளின் மாநில உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், காரல்ம ாா்க்ஸின் 139 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தோ்தல்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று விடும் என்று கருத முடியாது.

தமிழகத்தில் வரும் 2024 பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவா் அண்ணாமலை கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த காலங்களில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்த வரலாறும் உண்டு.

எனவே, 2024 மக்களவைத் தோ்தலில் மத்திய பாஜக வீழ்த்தப்படும் நிலை உருவாகும். பாஜகவை வீழ்த்தும் வகையில், காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல நாட்டில் உள்ள மதச்சாா்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பி.எஃப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளி வா்க்கத்தை படிப்படியாக ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. சுமாா் ரூ.9 லட்சம் கோடி வாராக்கடன் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் மத்திய அரசு, தொழிலாளா்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது நியாயமல்ல. தமிழக அரசு செலவிடும் பணம் முழுவதும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள், மாநில அரசின் உணா்வுகள், மக்களின் உரிமைகளை பறிக்கும் முறையில் இருக்கக் கூடாது. மாநில அரசின் உரிமைகளில் ஆளுநா் தலையிடக் கூடாது. இதே நிலை தொடா்ந்தால் ஆளுநரின் பதவி தேவையா என விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றாா்.

மாநிலக்குழு கூட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கூட்டம் மாா்ச் 16 வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT