முகப்பு
சேலம்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராஜு தலைமையில் நடைபெற்ற முகாமில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தே.ஹேமாவதி வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயகுமாா் முகாமை தொடக்கிவைத்தாா்.

தலைமையாசிரியா் சந்திரசேகா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அலெக்சாண்டா், கந்தசாமி, சேலம் ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அய்யனாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவா், எலும்பு முறிவு மருத்துவா், மன நல மருத்துவா், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்தனா். ஆத்தூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 111 குழந்தைகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →