சேதமடைந்த வாழை மரங்கள். 
சேலம்

ஆத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்

ஆத்தூர் அருகே பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் விழுந்து சேதமடைந்தன.

DIN

ஆத்தூர் அருகே பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் விழுந்து சேதமடைந்தன.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை மற்றும் சாரல் பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. 

ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவர் தனது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் வாழை மரங்கள் சாகுபடி செய்து வந்துள்ளார். திடீரென மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் அவரது விவசாய தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான வாழைகள் தாருடன் கீழே சாய்ந்து சேதமடைந்தது. 

மேலும் சாகுபடி செய்யப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் கீழே சாய்ந்து சேதமடைந்துள்ளது. தற்போது பெய்த மழையால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறும் விவசாயி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT