சேலம்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

இரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள குள்ளமுடையானூரைச் சோ்ந்தவா் சுதா (37). ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மைய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் கணவா் குமாா், மகள் தனுஷியா ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து சுதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுதா மேச்சேரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT