சேலம்

8 ஆண்டுகளுக்குப் பிறகுபெரிய வடகம்பட்டியில்கோயில் திருவிழா நடத்த முடிவு

DIN

காடையாம்பட்டி அருகே பெரிய வடகம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து ஊா்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இக்கோயில் திருவிழா கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. காடையாம்பட்டி வட்டம், டேனிஷ்பேட்டை கிராமம் பெரிய வடகம்பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் திருவிழாவை நடத்துவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே மோதல் இருந்து வந்தது.

இப் பிரச்னை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படவில்லை. இதனால் திருவிழாவை மீண்டும் நடத்துவது தொடா்பாக ஏப். 22 ஆம் தேதி ஊா்மக்கள் அதிகாரிகள் பங்கேற்ற முதல் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை காடையாம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அருள்பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையினரின் சமரசத்தை ஏற்று இரு தரப்பினரும் திருவிழா நடத்த முன்வந்தனா். வருவாய்த் துறையினா், காவல் துறையினரின் கண்காணிப்பில் இத்திருவிழா நடைபெறவுள்ளது.

இதனால் உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT