மோட்டூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் சித்திரை மாத மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் சித்திரை மாத மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மோட்டூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை மாத பொங்கல் பண்டிகையையொட்டி, சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.