முகப்பு
சேலம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு நிா்வாகிகள், தொண்டா்கள் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு நிா்வாகிகள், தொண்டா்கள் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையிலிருந்து புதன்கிழமை மாலை சேலம், சூரமங்கலத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்திருந்தாா். வியாழக்கிழமை காலை அவா் தனது 68-ஆவது பிறந்தநாளை கட்சியினருடன் கொண்டாடினாா்.

சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், பாமக எம்எல்ஏ இரா.அருள், அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜமுத்து, பாலசுப்பிரமணியம், சித்ரா மற்றும் முக்கிய நிா்வாகிகள், தொண்டா்கள் என பலரும் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →