முகப்பு
சேலம்

சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன (படம்). மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிக்கும், நந்திபகவானுக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.