சேலம்

சேலம்: பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்; தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம்

DIN

சேலம்: பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோரை மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அழகரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறும்போது, இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக கருதப்பட்டு வருகிறது ஆனால் இந்த ஜவுளித் தொழில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஜவுளித் துறை நிறுவனங்கள் மற்றும் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றம் தான் என்றார். 

கடந்த ஒன்றரை வருடங்களில் ரூ.220 இருந்த பஞ்சின் விலை ரூ.440 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பஞ்சு மற்றும் நூல்களை வாங்கி உற்பத்தி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய அரசு உள்நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தியை பற்றி கவனத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி  செய்வதிலேயே குறிக்கோளாக உள்ளதாகவும், இதனால் பெரும் வியாபாரிகள் பஞ்சு மற்றும் நூல் பெற்று பதுக்கி வைத்து செயற்க்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்தி வருவதாக தெரிவித்தார்.

எனவே இந்திய அரசு அவசர அவசியம் கருதி வெளிநாடுகளுக்கு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், பருத்தியை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

இந்தியாவில் பருத்தி உற்பத்தி அபரிதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்காமல் வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ததாகவும் தெரிவித்தார். இந்தியாவில் பதுக்கள் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த விஷயம் மத்திய அரசுக்கும் தெரியும் என்றும், மத்திய அரசு இதன் மீது நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் பருத்தி மற்றும் நூல் விலை வெகுவாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த தவறினால், தங்கள் போராடுவதை  தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பேட்டியின்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT